Home One Line P1 மகாதீர் பிரதமர் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் எழும்!- அனுவார் மூசா

மகாதீர் பிரதமர் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் எழும்!- அனுவார் மூசா

803
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியின் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் பிரதமர் பதவியை விட்டு விலக நிர்பந்திக்கப்பட்டால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அனுவார் மூசா எச்சரித்தார்.

அரசியல் நிலைத் தன்மையை உறுதிப்படுத்த இது உதவும் எனும் பட்சத்தில் மகாதீர் தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இந்த நாட்டை நிர்வகிக்க முடியாது என்று நான் கூறவில்லை. ஆனால், டாக்டர் மகாதீர் இங்கே இருக்கிறார். அவர் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார். ஏன் அவர் தனது வேலையைச் செய்ய விடக்கூடாது. அவருக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கக்கூடாது?”

#TamilSchoolmychoice

டாக்டர் மகாதீரை பதவி விலகக் கோரி நீங்கள் கட்டாயப்படுத்தினால், அது சிக்கல்களையும் ஏற்படுத்தும். நம்பிக்கை கூட்டணியின் உறுதியற்ற தன்மை நாடு முழுவதையும் பாதிக்கும்என்று அனுவார் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி மக்களுக்கு சேவை செய்வதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

இது அன்வார் பிரதமராக இருப்பதைப் பற்றியது அல்ல, மாறாக மக்களுக்கு சிறந்ததை வழங்க நம்பிக்கைக் கூட்டணி மக்கள் வழங்கிய ஆணையைப் பற்றியது. டாக்டர் மகாதீரின் அனுபவத்துடனும்,  டாக்டர் மகாதீர் தன்னால் முடிந்தவரை பதவியில் இருக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன்என்று அவர் கூறினார்.

நாட்டிற்கு நிலைத் தன்மை தேவை, முதலீட்டாளர்களின் நம்பிக்கை, வலுவான தலைமை நாட்டிற்கு முக்கியம் என்று அனுவார் வலியுறுத்தினார்.

அன்வார் இப்ராகிம் காத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.