Home One Line P1 இலவசக் கல்வி திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற முயற்சிப்போம்!- மஸ்ஸீ மாலிக்

இலவசக் கல்வி திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற முயற்சிப்போம்!- மஸ்ஸீ மாலிக்

592
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்த, பல்கலைக்கழக மட்டத்தில் இலவச கல்வி அளிப்பதற்கான திட்டம் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்று கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மட்டத்தில், அரசாங்க மானியங்களுக்கு மேல், மாணவர்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச கட்டணங்கள் இன்னும் நடப்பில் உள்ளன. சிறந்த வழிமுறை என்ன என்பதைக் காண, இது இன்னும் இறுதி பகுப்பாய்வு கட்டத்தில் உள்ளது.”

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், குறிப்பிடப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதை உறுதிசெய்ய முயற்சிப்போம்என்று மஸ்லீ இன்று திங்கட்கிழமை மக்களவையில் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி கல்வி ஏற்கனவே இலவசம் என்றும் மஸ்லீ சுட்டிக்காட்டினார். தனது அமைச்சகம் ஏற்கனவே பி40 மாணவர்களுக்கு பல சலுகைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

அது மட்டுமல்லாமல், மற்ற அமைச்சகங்களும் பி40 மாணவர்களை மேம்படுத்துவதற்கும் உதவுவதற்கும் பல முயற்சிகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.