அந்த வரிசையில் கடந்த அக்டோபர் 8 முதல் 12 வரை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெற்ற இளம் ஆய்வாளர்களுக்கான அறிவியல் புத்தாக்கப் போட்டியில் (IYIA – International Young Inventors Awards) நெகிரி மாநிலத்தின் தேசிய வகை பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டிகளில் வெற்றி வாகை சூடிய மாணவி மணிஷிகா சரவணன், மாணவி தீர்த்தனா முத்துராமன் மற்றும் மாணவன் சர்வின் சரவணன் ஆகியோர் இந்த வெற்றியின் மூலம் பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.
Comments