Home One Line P1 மலாய் தன்மான காங்கிரஸ்: அக்டோபர் 25-இல் சைனால் க்ளிங் புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிப்பார்!

மலாய் தன்மான காங்கிரஸ்: அக்டோபர் 25-இல் சைனால் க்ளிங் புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிப்பார்!

638
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய் தன்மான காங்கிரஸ் மாநாட்டின் தலைமைச் செயலாளரான ஓய்வுபெற்ற பேராசிரியர் சைனால் க்ளிங் வருகிற வெள்ளிக்கிழமை புக்கிட் அமானில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் தமிழ் முன்னேற்ற கழக உறுப்பினர் யோகநாதன் லோகநாதன் அளித்த காவல் துறை புகார் தொடர்பில் அவர் விசாரிக்கப்படுவார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் புக்கிட் அமானில் சைனால் சாட்சியம் அளிக்க வருவார் என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை தலைமை உதவி இயக்குநர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி நடைப்பெற்ற இந்த மாநாட்டில் கூட்டாட்சி அரசியலமைப்பு, ராஜாக்களின் நிலை மற்றும் மலாய்க்காரர் சிறப்பு அந்தஸ்து குறித்து சைனால் சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அடிக்கடி மலாய்க்காரர்களின் கருணையையும், நன்றியுடனும் இருக்க தவறுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மலேசியா மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அம்னோ மற்றும் பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் நான்கு பொது உயர்கல்வி நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இந்த பேரணியில் கல்வி நிலையங்களின் தலையீடும் உள்ளதாக ஒரு சிலர் விமர்சித்துள்ளனர்.