Home One Line P2 லாரி கொள்கலனில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு, அதிர்ச்சியில் இலண்டன்!

லாரி கொள்கலனில் 39 சடலங்கள் கண்டுபிடிப்பு, அதிர்ச்சியில் இலண்டன்!

854
0
SHARE
Ad

இலண்டன்: இலண்டனின் கிழக்கே உள்ள ஒரு தொழிற்பேட்டையில் லாரி கொள்கலனில் 39 சடலங்களை பிரிட்டன் காவல் துறையினர் இன்று புதன்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த லாரி பல்கேரியாவிலிருந்து வந்ததாகவும், சனிக்கிழமை வேல்ஸில் உள்ள ஹோலிஹெட்டில் பிரிட்டனுக்குள் நுழைந்ததாகவும் நம்பப்படுகிறது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயதுடைய இந்த லாரி ஓட்டுனர் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியில் இருக்கிறோம். இருப்பினும் இது ஒரு நீண்ட செயல்முறையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்என்று தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மரைனர் கூறினார்.

#TamilSchoolmychoice

சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுனரை நாங்கள் கைது செய்துள்ளோம்.” என்று அவர் கூறினார்.

பலியான 39 பேர்களில், 38 பேர் பெரியவர்கள் என்றும் மற்றும் ஓர் இளைஞன் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது. அனைவரும் சம்பவ இடத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.