Home One Line P1 செம்பனை எண்ணெய்: மூர்க்ககுணத்திற்கும், வணிகப் போருக்கும் இது சரியான நேரமில்லை!- அப்துல் காடிர்

செம்பனை எண்ணெய்: மூர்க்ககுணத்திற்கும், வணிகப் போருக்கும் இது சரியான நேரமில்லை!- அப்துல் காடிர்

682
0
SHARE
Ad
டத்தோ ஏ.காடிர் ஜாசின்

கோலாலம்பூர்: இந்தியாவால் மலேசிய செம்பனை எண்ணெய் புறக்கணிப்பு அச்சுறுத்தல் பெல்டா குடியேறிகளையும், சிறு உரிமையாளர்களையும் பாதிக்கக்கூடும் என்று பிரபல வலைத்தள எழுத்தாளர் அப்துல் காடிர் ஜாசின் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் இந்தியாவின் கொள்கைகள் குறித்து டாக்டர் மகாதீர் முகமட் விமர்சித்ததன் மூலம் தூண்டப்பட்ட சமீபத்திய எதிர்ப்பு, அமெரிக்கசீனா வணிகப் போரினால் கொண்டு வரப்பட்ட பலவீனமான பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கும் என்று அவர் கூறினார்.

இது மூர்க்ககுணம் மற்றும் வணிகப் போர்களில் ஈடுபடுவதற்கான நேரம் அல்ல. இங்குள்ள சிறிய வணிகப் பிரச்சனைகள் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்என்று அவர் தமது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த மாதம் இந்தியா காஷ்மீர் மீது படையெடுத்ததாக குற்றம் சாட்டிய மகாதீரின் கருத்துக்கள் மலேசியாவை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியர்கள் பலர் அழைப்பு விடுத்துள்ளதோடு, இந்திய அளவில் சீற்றத்தைத் தூண்டியது.

செம்பனை எண்ணெய் மற்றும் பிற மலேசிய பொருட்களின் இறக்குமதியை இந்தியா மறுஆய்வு செய்யலாம் என்று இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயை வாங்க வேண்டாம் என்று இந்திய வணிக அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சரவாக்கில் மட்டும் ஒரு செம்பனை தோட்டக்காரர் 90,000 டன் சேமிப்பை வைத்திருக்கிறார். இம்மாதிரியான நிச்சயமற்ற தன்மை காரணமாக வாங்குபவர்கள் தங்கள் ஒப்பந்தங்களை இரத்து செய்தார்கள் என்றால் அவர்களது நிலைமை கேள்விக்குறியே.

பெரிய விவசாயிகளுக்கு இது மோசமானதாக இருக்குமானால், பெல்டா குடியேறிகள் மற்றும் சிறு உரிமையாளர்களுக்கு இது நல்லதாக தெரியவில்லைஎன்று அவர் கூறினார்.

நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை. அரசாங்கம் நன்கு தெரிந்திருக்க வேண்டும்,” என்று பிரதமரின் ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு சிறப்பு ஆலோசகரான காடிர் கூறினார்.