Home One Line P2 “பிகில்” – மலேசியாவிலும் உலக அளவிலும் வெளியாகிறது – தமிழகத்தில் சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி

“பிகில்” – மலேசியாவிலும் உலக அளவிலும் வெளியாகிறது – தமிழகத்தில் சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி

845
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி, தீபாவளிக்கு முன்பாக வெளிவருமா இல்லையா என்ற கேள்விகளை இரசிகர்களின் மனங்களில் எழுப்பியிருந்த – நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ கூட்டணியில் மலர்ந்த – பிகில் திரைப்படம் ஒருவழியாக இன்று வெள்ளிக்கிழமை உலகம் எங்கும் வெளியாகிறது.

மலேசியாவிலும், திரையரங்குகள் பிகில் படத்திற்கான திரையீட்டு நேரங்களை பல்வேறு திரையரங்குகளில் வெளியிட்டுள்ளன.

பிகில் கதைக்கு உரிமை கொண்டாடி உதவி இயக்குநர் ஒருவர் தொடுத்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் பிகில் படம் எந்தவிதச் சிக்கலும் இன்றி வெளியிடப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பிகில் உட்பட எந்தப் படத்திற்கும் அதிகாலை முதற்கொண்டு திரையிடப்படும் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால், பிகில் படத்தின் முதல் நாள் அல்லது முதல் வார வசூல் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற கவலை தயாரிப்பாளர்களிடையே நிலவியது.

படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் பிகில் படத்திற்கான முதல் காட்சியைக் காண திரையரங்கில் அமர்ந்திருப்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனினும் இறுதி நேரத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழக திரைப்படத் துறைக்கான அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒருநாள் மட்டும் சிறப்புக் காட்சிகளுக்கு ‘பிகில்’ படத்திற்கு, சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையே பிகில் படத்தின் முதல் காட்சி தமிழகத்தின் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.