யாலா (தாய்லாந்து) – மலேசிய எல்லையை ஒட்டியுள்ள தென் தாய்லாந்து பகுதியில் உள்ள யாலா மாவட்டத்தில் உள்ள பன்னாங் சாத்தா என்ற இடத்தில் இன்று குண்டுகள் வெடித்ததில் ரோந்துப் பணி காலாட் படையினர் நால்வர் காயமடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்புகளினால், மேம்பாட்டுப் பணிகளைப் பார்வையிட யாலா, பட்டாணி மாவட்டங்களுக்கு வருகை தந்த தாய்லாந்து துணைப் பிரதமர் ஜெனரல் பிராவிட் வோங்சுவான்னின் பயணத்தில் இடையூறுகள் ஏற்பட்டன.
நான்கு ரோந்துப் படையினரும் வாகனம் ஒன்றில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இன்று சனிக்கிழமை காலை 9.40 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த 10 முதல் 15 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை தூரத்தில் இருந்து கம்பியில்லா தொலைத் தொடர்பு கருவி ஒன்றை இயக்கியதன் மூலம் இந்த வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன.
காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.