Home One Line P1 விடுதலைப் புலிகள் விவகாரம் : 10 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

விடுதலைப் புலிகள் விவகாரம் : 10 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

740
0
SHARE
Ad

கோலாலம்பூர்- இன்று செவ்வாய்க்கிழமை நாடு முழுமையிலும் விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 10 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்திற்கு ஏ.கலைமுகன் என்ற 28 வயது நபர் இன்று காலை கொண்டு வரப்பட்டார். அவர் மீது பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாக அவரது வழக்கறிஞர் வி.யோகேஸ் தெரிவித்தார் என மலேசியாகினி இணைய ஊடகத்தின் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

கலைமுகன் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி விடுதலைப் புலிகள் தொடர்பில் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

மேலும் இருவர் கோலகங்சார் (பேராக்) நீதிமன்றத்திலும், ஒருவர் சிகாமாட் (ஜோகூர்), நீதிமன்றத்திலும், இன்னொருவர் சிப்பாங் நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்படுகின்றனர்.

ஜசெக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.குணசேகரன், ஜி.சாமிநாதன் இருவரும் பட்டவொர்த், ஆயர் குரோ நீதிமன்றங்களில் நிறுத்தப்படுகின்றனர்.

மேலும் இருவர் எதிர்வரும் வியாழக்கிழமை அக்டோபர் 31-ஆம் தேதி கோலாலம்பூரில் குற்றம் சாட்டப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.