Home One Line P1 வெளிநாட்டு மத போதகர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பதாக அவர்களின் பின்னணி ஆராயப்படும்!- மொகிதின்

வெளிநாட்டு மத போதகர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பதாக அவர்களின் பின்னணி ஆராயப்படும்!- மொகிதின்

943
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மதம் சார்ந்த உரைகளை நடத்த மலேசியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு மத போதகர்களும் அவர்கள் அவ்வாறு செய்வதற்கு முன்னதாக அவர்களின் பின்னணி ஆராயப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

இம்மாதிரியான போதக குழுக்கள் மாறுபட்ட போதனைகளிலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதற்காக நாட்டில் உள்ள மத அமைப்புகளுடன் தமது அமைச்சு சோதனை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

யார் இங்கு வந்தாலும், அவர்களின் உரைகள் எதனை மையமிட்டுள்ளது என்பதை கண்காணிப்போம். முஸ்லிம் போதகர்களைப் பொறுத்தவரை, மாநில மத குழுக்கள் உள்ளன, மேலும் சான்றுகள் இல்லாதவை அனுமதிக்கப்படாது. முஸ்லிம் அல்லாத மத போதகர்களையும் நாங்கள் கண்காணிப்போம், ”என்று நேற்று செவ்வாய்க்கிழமை மக்களவையில் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்து கோயில்கள் மற்றும் கிருஸ்துவ தேவாலயங்களுக்கான அர்ச்சகர்கள், பாதிரியார்கள், போதகர்கள், துறவிகள் மற்றும் குட்வாராவுக்கு வரும் கிராந்தி ஆகியோருக்கான நிலையான இயக்க நடைமுறை குறித்து மொகிதின் கூறுகையில், குடிநுழைவுத் துறை வருகைக்கான அட்டையை 12 மாதங்களுக்கு வெளிநாட்டினருக்கு வழங்குகிறது என்றார். மேலும் இது 36 மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.