Home One Line P2 பிரிட்டன் தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது!

பிரிட்டன் தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது!

664
0
SHARE
Ad

இலண்டன்: பிரெக்சிட் முட்டுக்கட்டைகளை உடைக்கும் நோக்கில் பிரிட்டன் தனது தேர்தலை டிசம்பர் மாதத்தில் நடத்துகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சான் இதற்கான ஒப்புதலை நாடாளுமன்ற வாக்களிப்பில் பெற்றார்.

தோல்விகளின் தொடர்ச்சியாக ஜான்சனுக்கு கிடைத்த ஓர் அரிய நாடாளுமன்ற வெற்றியில், டிசம்பர் 12-ஆம் தேதி தேர்தலுக்கான அவரது குறுகிய மசோதா 438 வாக்குகளுடன் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மசோதா இப்போது ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸுக்கு செல்கிறது.

நாட்டை ஒன்றிணைத்து பிரெக்சிட் செய்து முடிக்க வேண்டிய நேரம் இதுஎன்று ஜான்சன் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, பிரெக்சிட் திட்டத்திற்கு எழுந்த சிக்கல்களைத் தொடர்ந்து பிரிட்டன் பொதுத் தேர்தலை முன்கூட்டியே டிசம்பர் 12-ஆம் தேதி நடத்தும் முயற்சியில் போரிஸ் ஜோன்சன் தோல்வி அடைந்தார். கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கு 70 உறுப்பினர்கள் வாக்களித்த வேளையில் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து 299 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இதற்கிடையில் பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக் கெடுவை அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து ஜனவரி 31-ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியம் நீட்டித்திருக்கிறது. அதற்கு மேல் கால நீட்டிப்பு வழங்க முடியாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.