கோலாலம்பூர்: 2018-ஆம் ஆண்டின் மலேசியாவில் பயங்கரவாதம் குறித்து அமெரிக்க அரசின் அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் குழு தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெறாததை மேற்கோள்காட்டி மலேசிய காவல் துறை தெளிவுபடுத்துமாறு ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.
அந்த அறிக்கையில், ஐஎஸ், அபு சாயாப், அல்கொய்தா மற்றும் ஜேஐ போன்ற பயங்கரவாத குழுக்களுக்கான ஆதாரமாகவும் போக்குவரத்து இடமாகவும் மலேசியாவை மட்டுமே மேற்கோளிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“அந்த அறிக்கையில், அமெரிக்க அரசாங்கம் விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளைக் குறித்து தொடவில்லை.”
“விடுதலைப் புலிகளுடன் உறவு வைத்திருப்பதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான காவல் துறையின் நடவடிக்கை பொதுமக்களின் கவலையை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் முடங்கிவிட்டது. ஐஎஸ், அபு சாயாப், அல்கொய்தா மற்றும் ஜேஐ போன்ற தீவிரவாத பயங்கரவாத குழுக்கள் இன்னும் இயங்கி வருகிறது ”என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறாக நடத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் அளித்த உத்தரவாதங்களை ஜசெக வரவேற்பதாக குவான் எங் கூறினார்.