Home One Line P1 “டிரம்ப் அடுத்த அதிபராகத் தொடர்ந்தால் வணிகப் போர் தொடரும்!”- மகாதீர்

“டிரம்ப் அடுத்த அதிபராகத் தொடர்ந்தால் வணிகப் போர் தொடரும்!”- மகாதீர்

998
0
SHARE
Ad

பேங்காக்: 2020-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், மீண்டும் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு முக்கிய உலக பொருளாதாரங்களை உள்ளடக்கிய வணிகப் போர் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்த வணிகப் போர் எப்போது முடிவடையும் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது தொடர்ந்து நிலைத்திருக்கும்.”

அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் நாம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மற்றொரு வணிக யுத்தத்தைக் காண்போம்என்று டாக்டர் மகாதீர் முகமட் தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த ஆசியான்சீனா உச்ச மாநாட்டிற்கு பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சீனாவும் இந்த விவகாரம் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளதுடன், வணிகப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆசியான் தலைவர்கள் அனைவரும் வணிக யுத்தம், பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பதால் அதனை நிறுத்த வேண்டும் என்று ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் ஓர் அமைதியான உலகத்தை விரும்புகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சீனாவிலிருந்து மலிவான பொருட்கள் வெளியானதைத் தொடர்ந்து நியாயமற்ற வணிக நடைமுறைகளை நிறுத்த, அமெரிக்க சீனாவிற்கு சுங்கவரி மற்றும் பிற வணிக தடைகளை விதித்தது.

அமெரிக்க இறக்குமதிக்கும் சுங்கவரி விதித்து சீனா பதிலளித்தது.

கடந்த நவம்பர் 1-ஆம் தேதி, உலக வணிக அமைப்பு, அமெரிக்க பொருட்களுக்கு 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத் தடைகளை விதிக்க சீனாவுக்கு அனுமதி அளித்தது.