Home One Line P2 இணைய வணிகத்தை ஆதரித்து நடித்ததால் விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இணைய வணிகத்தை ஆதரித்து நடித்ததால் விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு!

854
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விஜய் சேதுபதிக்கு வணிகர்கள் மத்தியில் தற்போது பெரியளவில் எதிர்ப்புகள் கிளம்பி அது நாளை செவ்வாய்க்கிழமை போராட்டமாக உருவெடுக்க உள்ளது. இணைய வணிகத்தை ஊக்குவித்து தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு வணிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் இனைய வணிக நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் வணிகர்கள் மத்தியில் தற்போது சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நவீன உலகத்தில் தற்போது இணைய வணிகமானது பெருமளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், சிறுகுறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் நேரடியாக சென்று பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வரும் நிலையில், இந்த நடைமுறை பெரும் ஆதரவுப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து இணைய வணிகத்திற்கு எதிராக  போராடி வருகிறது. இந்நிலையில்தான் விஜய் சேதுபதி நடித்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விஜய் சேதுபதியின் வீடு முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பாக கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது வரும் 5-ஆம் தேதி விஜய் சேதுபதியின் அலுவலகத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.