Home One Line P1 கிளந்தான் சுல்தானின் முன்னாள் மனைவி, தங்கள் மகன் என்று கூறும் குழந்தையின் படத்தை பதிவிட்டுள்ளார்!

கிளந்தான் சுல்தானின் முன்னாள் மனைவி, தங்கள் மகன் என்று கூறும் குழந்தையின் படத்தை பதிவிட்டுள்ளார்!

947
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் முகமட்டின் முன்னாள் மனைவி ரிஹானா ஒக்ஸானா கோர்படென்கோ கடந்த சனிக்கிழமை, சுல்தான் முகமட்டுக்கும் அவருக்கும் பிறந்த புதல்வர் என்று கூறி, ஒரு குழந்தையின் படத்தை தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

ஹலோ, என் பெயர் இஸ்மாயில் லியோன். எனக்கு 5 மாத வயதாகிறது. என் அம்மா என்னை மிகவும் நேசிக்கிறார், ”என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அப்பதிவுக்கு 83,700-க்கும் மேற்பட்ட விருப்பங்கள் தரப்பட்டு, பலர் அக்குழந்தை, அவரது தந்தையைப் போலவே இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

கடந்த மாதம், ஒக்ஸானா, ரஷ்யாவின் டோகோமிலோவ்ஸ்கி மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றோரை தீர்மானிக்கும் மனுவை தாக்கல் செய்தார். சுல்தான் முகமட்டை பிரதிவாதியாகப் பெயரிட்டு, மாஸ்கோ மற்றும் இலண்டனில் 47 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துகளும், மாதாந்திர கொடுப்பனவாக 123,000 ரிங்கிட்டையும்கோரியயுள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற அவரது திருமணத்தை சுல்தானின் வழக்கறிஞர், அக்குழந்தைக்கு சுல்தான் முகமட் தந்தையில்லை என்ற கூற்றை வெளியிட்டப் பின்னர் இது நிகழ்ந்தது.

இவ்விசாரணையில் கலந்து கொள்ளவோ ​​அல்லது மரபணு பரிசோதனை செய்யவோ சுல்தான் முகமட் மறுத்தால், நீதிமன்றம் ஒக்ஸானாவின் பெற்றோரை தீர்மானிக்கும் கோரிக்கையை ஏற்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.