Home One Line P1 “நாடு முழுவதும் 640,000 வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன!”- குலசேகரன்

“நாடு முழுவதும் 640,000 வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன!”- குலசேகரன்

882
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போது நாடு முழுவதும் மொத்தம் 640,000 வேலைகள் வழங்கப்படவுள்ளதாகவும், இவ்வாண்டு 150,000-க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார்.

வேலை வாய்ப்புகள் 3டி துறையை மட்டும் சார்ந்திராமல், மேலாண்மை, தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற வேலைகளையும் உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

நம்மிடம் 640,000 வேலைகள் உள்ளன. 3டி வேலை மட்டுமல்ல. இதில் 6,000-க்கும் மேற்பட்ட நிருவாகத் துறைகளிலும், 21,000-க்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் வேலைகளும் காத்திருக்கின்றன. அத்துடன் 22,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.”

#TamilSchoolmychoice

மற்றொரு அம்சம் என்னவென்றால், பசுமை பொருளாதாரம்  வாயிலாக 250,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதுஎன்று அவர் இன்று மக்களவையில் தெரிவித்தார்.

ஆனால், இந்த பணிகளில் இணைவதற்கு பலர் ஆர்வம் காட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், பல காலியிடங்கள் உள்ளன, ஆனால் நம் பிள்ளைகள் யாரும் இந்த வேலையை ஏற்க விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.