Home One Line P2 கமல்ஹாசன் வெளியிட்ட ரஜினியின் ‘தர்பார்’ குறுமுன்னோட்டம்

கமல்ஹாசன் வெளியிட்ட ரஜினியின் ‘தர்பார்’ குறுமுன்னோட்டம்

860
0
SHARE
Ad

சென்னை – இன்று தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கமல்ஹாசனுக்கும் இன்னொரு உச்ச நடிகர் ரஜினிகாந்துக்கும் இடையிலான 45 ஆண்டுகால நட்பைப் பற்றி விவரிக்க வேண்டியதில்லை.

அதை இன்னொரு கோணத்தில் எடுத்துக் காட்டும் விதமாக இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு, ரஜினி நடித்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படவிருக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் என்ற குறுமுன்னோட்ட விளம்பரத்தை வெளியிட்டார்.

பொதுவாக இதுபோன்று ஒரு உச்ச நடிகரின் பட விளம்பரத்தை இன்னொரு போட்டி உச்ச நடிகர் வெளியிடுவது மிகவும் அபூர்வமான ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக அட்டகாசமான காட்சிகளைக் கொண்ட தர்பார் படத்தின் அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: