Home One Line P1 “வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது!”- மகாதீர்

“வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது!”- மகாதீர்

825
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாம் வேண்டுமனே ஒருவரை பதவியிலிருந்து நீக்க இயலாது என்றும், அதற்காக மட்டுமே தாம் பிரதமராக இருக்கவில்லை என்றும் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ்ஸை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்டித் தரப்பினர் மாமன்னருக்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மிகவும் தீவிரமான தவறு ஏதேனும் நடந்தால் மட்டுமே ஒருவரை தாம் அவ்வாறு செய்ய இயலும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சில நேரங்களில் அவர்கள் தவறு செய்கிறார்கள். சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் நிறைய தவறுகளைச் செய்ததால் அவர்களை நீக்க விரும்புகிறேன். ஆனால், எங்களுக்கு சட்ட விதிகள் உள்ளன, நாங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒருவரை பதவி நீக்கம் செய்வதற்கு அதிகமான அழுத்தம் கொடுத்தாலும் அவர் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழீழ விடுதலைகள் தொடர்பாக சிரம்பான் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளை இரத்து செய்தது அடுத்து தோமஸை நீக்குவதற்கான குரல் எதிர்க்கட்சியினரிடமிருந்து எழுந்தது.