வானிலை சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் (பினாங்கு) நக்ரி சூறாவளிக்கு நடுவில் இருக்கிறோம். இது சனிக்கிழமை வியட்நாமை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மேட்மோ சூறாவளி மியான்மார் மற்றும் வங்காளதேசத்தை நாளை சனிக்கிழமை பாதிக்கும்.”
“இவ்விரண்டு சூறாவளிகளும் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியான இடியுடன் கூடிய மழை பெய்யும்” என்று அவர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
உபகரணங்கள், வாகனங்கள், தளவாடங்கள் மற்றும் மனிதவளம் உட்பட தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக சிறப்புப் படைகள் மற்றும் மக்கள் நலன் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.