Home One Line P2 பக்டாடியின் மனைவி கைது செய்யப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது!

பக்டாடியின் மனைவி கைது செய்யப்பட்டதாக துருக்கி தெரிவித்துள்ளது!

1059
0
SHARE
Ad

அங்காரா: கடந்த வாரம் அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட டாயிஷ் தலைவர் அபுபாக்கர் அல்பாக்டாடியின் மனைவிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதை துருக்கி உறுதிப்படுத்தியுள்ளது.

துருக்கிய அதிபர் தாயிப் எர்டோகன் கடந்த புதன்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், இந்த கைது குறித்து விரிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.

அவர்கள் சிரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக எர்டோகன் கூறினார்.

#TamilSchoolmychoice

சிரியாவில் அவரது சகோதரி மற்றும் மைத்துனரையும் நாங்கள் கைது செய்தோம்என்று தாயிப் எர்டோகன் அங்காரா பல்கலைக்கழகத்தில் ஓர் உரையில் கூறினார்.

இதற்கிடையில், அப்பெண் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதியன்று சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஹாடே மாகாணத்தில் பாகடாடியின் மகள் லீலா ஜாபீர் உட்பட 10 பேருடன் கைது செய்யப்பட்டதாக ஏஎப்பி தெரிவித்துள்ளது.

அந்தப் பெண் தன்னை ரானியா மஹ்முட் என்று அறிமுகப்படுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  இருப்பினும் அவரது உண்மையான பெயர் அஸ்மா பாவ்ஸி முகமட் அல்குபேஷி என்று கூறப்படுகிறது.

ஈராக் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளின் அடிப்படையில் அக்குடும்பம் பாக்டாடியுடன் உறவு வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.