Home One Line P1 “மேட்மோ- நக்ரி சூறாவளிகள் நாட்டை தாக்காது!”- வானிலை ஆய்வு மையம்

“மேட்மோ- நக்ரி சூறாவளிகள் நாட்டை தாக்காது!”- வானிலை ஆய்வு மையம்

747
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மேட்மோ மற்றும் நக்ரி சூறாவளிகள் நாட்டை தாக்கும் என்ற சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை மலேசியர்கள் எளிதில் நம்ப வேண்டாம் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் இயக்குநர்  ஜெயிலான் சைமன் தெரிவித்தார்.

இவ்விரண்டு சூறாவளிகளும்,  மலேசியாவைத் தாக்காது என்றும் மக்கள், குறிப்பாக பினாங்கு மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

மேட்மோ சூறாவளி தற்போது வங்காளதேசம் மற்றும் கிழக்கிந்தியாவிற்கு அருகிலுள்ள வங்க விரிகுடாவில் அமைந்துள்ளது, இது நம் நாட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது.” என்று அஸ்ட்ரோ அவானி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சூறாவளி நக்ரி, நவம்பர் 11-ஆம் தேதி வியட்நாமைத் தாக்கும் என்றும், அதனால் மலேசியாவில் சிறிதளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

நக்ரியைப் பொறுத்தவரை, இது ஒரு சூறாவளி அல்ல, ஆனால் வெப்பமண்டல புயல், அதாவது காற்று அவ்வளவு வலுவாக இருக்காது. நக்ரி வியட்நாமின் கிழக்கு கடற்பரப்பில் அமைந்துள்ளது மற்றும் கடந்த சில நாட்களாக குறைந்த அழுத்த அமைப்பாக இப்பகுதியில் உள்ளது. இது வியட்நாமை நோக்கி நகர்ந்து, நவம்பர் 11-ஆம் தேதி வியட்நாமில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

நக்ரி புயலின் காரணமாக குறைந்தபட்ச விளைவுகளாக முன்பு இருந்தது போலவே கனமழை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேட்மோ மற்றும் நக்ரி சூறாவளிகளின் செய்தி சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பினாங்கைத் தாக்கும் என்ற குற்றச்சாட்டுடன் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதற்கிடையில், பினாங்கு அரசு ஆட்சிக்குழு உறுப்பினர், பீ பூன் போ, இது சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒத்துழைப்பதாகவும், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.