Home One Line P2 “என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள், எளிதில் அனுமதிக்கமாட்டேன்!”- ரஜினிகாந்த்

“என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள், எளிதில் அனுமதிக்கமாட்டேன்!”- ரஜினிகாந்த்

738
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கும் பாஜகவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அவருடனான பாஜக கட்சித் தலைவர்கள் சந்திப்பும் அதனை பறைசாற்றும் வண்ணம் இருந்தது.

ஆயினும், தற்போது அதிர்ச்சியூட்டும் விதமாக, திருவள்ளுவருக்கும், தமக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மக்களிடத்தில் இது கிண்டலுக்குரிய தகவலாகவும், ஒரு சிலர் ரஜினியின் உண்மை தோற்றம் இதுதான் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

“திருவள்ளூவர் ஒரு சித்தர். அவரை எந்த மதம், சாதிக்குள்ளும் அடக்க முடியாது. திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தவர். அதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. அவர் நாத்திகர் அல்ல, ஆத்திகர்.” என்று அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது ரஜினிகாந்த் கூறினார்.

“டுவீட்டரில் காவி உடையுடன் வள்ளுவரின் படத்தை பாஜக வெளியிட்டது அவர்களது விருப்பம். நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கு. அவற்றை விட்டுவிட்டு, இவ்வளவு சர்ச்சையாக்கியது நகைப்பாக இருக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், உள்ளாட்சி தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்றும்,   பொன்.ராதாகிருஷ்ணன் உடனான தமது சந்திப்பு சாதாரணமானது என்றும் அவர் குறிப்பிட்டார். ராதாகிருஷ்ணன் தம்மை பாஜகவில் இணையுமாறு வலியுறுத்தவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார்

தம் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்றும், அதனை தாம் நடக்கவிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.