கோலாலம்பூர்: கோலா பிலா நாடாளுமன்ற உறுப்பினர் எடின் ஷாஸ்லீ ஷிட் தடுமாறிய நிலையில் மக்களவையில் கீழே அமர்ந்ததால், மக்களவை இன்று திங்கட்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருந்தது.
எடின் மண்டபத்திற்குள் நுழைந்த சிறிது நேரத்தில் திடீரென அமர்ந்ததாகக் கூறப்படுகிறது.
“துணை அமைச்சர் மீது கவனம் செலுத்த சபை இடைநிறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ உதவி கோருங்கள்” என்று சபாநாயகர் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 21-ஆம் தேதியன்று, பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரான மன்சோர் ஓத்மான் 2020 வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் மயக்கமடைந்து தனது நாற்காலியில் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாசப் பிரச்சனையை எதிர்கொண்டதால் ஷாஸ்லீ தேசிய இருதய சிகிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.