கோலாலம்பூர்: மலேசிய ஊடக மன்றம் (எம்எம்சி) அமைப்பதைப் பற்றி அமைச்சரவை சமீபத்தில் ஒப்புக் கொண்டதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் துணை அமைச்சர் எடின் சிஸ்லி ஷிட் தெரிவித்தார்.
அம்மன்றம் சம்பந்தப்பட்ட முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அவரின் தலைமையில், ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு நபர்களுடன் அதன் கட்டமைப்பின் அம்சங்களைப் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“எம்எம்சி நிறுவப்படுவது சரியான நேரத்தில் அமைந்துள்ளது. இந்த மன்றம் நாட்டில் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்தையும் நலனையும் உறுதி செய்யும்.”
“எம்எம்சி நிறுவப்பட்டவுடன் ஊடகவியலாளர்களின் பிரச்சனைகள் தொடர்பான பல விஷயங்கள் அவ்வப்போது தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.