Home One Line P2 குடியுரிமைச் சட்டத் திருத்தம்: டில்லியில் போராட்டம் வெடித்தது!

குடியுரிமைச் சட்டத் திருத்தம்: டில்லியில் போராட்டம் வெடித்தது!

651
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வடக்கு மாநிலங்களில் வழுத்து வரும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை டில்லியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்தனர்.

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் காவல் துறையினருக்கு மோதல் ஏற்பட்ட நிலையில், பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அவ்விடமே போர்களமாகக் காட்சியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வேறு வழியின்றி காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைப் குண்டுகளை வீசியும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதில் இருந்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதுவரை நடந்த போரட்டங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.