Home நாடு 7 குற்றச்சாட்டுகளுக்கும் நஜிப் எதிர்வாதம் புரிய வேண்டும் – நீதிபதி தீர்ப்பு

7 குற்றச்சாட்டுகளுக்கும் நஜிப் எதிர்வாதம் புரிய வேண்டும் – நீதிபதி தீர்ப்பு

796
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான 42 மில்லியன் ஊழல் வழக்கில் நஜிப் மீதான 7 குற்றச்சாட்டுகளையும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்திருப்பதால், அவற்றின் மீது நஜிப் தனது எதிர்வாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி முகமர் நஸ்லான் முகமட் கசாலி இன்று திங்கட்கிழமை காலை தீர்ப்பளித்தார்.

இதனைத் தொடர்ந்து சத்தியப் பிரமாணத்தோடு கூடிய தனது வாக்குமூலத்தைச் சாட்சியங்களாக வழங்கவிருப்பதாக நஜிப் தெரிவித்துள்ளார்.

நஜிப் வழக்கின் பார்வையாளர்களாக அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் வந்திருந்தனர்.