Home நாடு ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் நஜிப்!

ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் நஜிப்!

780
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஆண்டு பதவியை இழந்தது முதல் பல்வேறு வழக்குகளுக்காக நீதிமன்றப் படிகளில் ஏறிவரும் நஜிப் துன் ரசாக் இன்று ஒரே நாளில் இரண்டு நீதிமன்றங்களில் வெவ்வேறு வழக்குகளுக்காக வரவேண்டியிருந்தது.

நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுயிரா முன்னிலையில் நடைபெறும் 1எம்டிபி விசாரணைக்காக நீதிமன்றம் வந்த நஜிப், காலை 10.00 மணியளவில் அந்த வழக்கு விசாரணையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு, வேறொரு நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியதிருந்தது.

நஜிப் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்பான 42 மில்லியன் ஊழல் வழக்கில் நஜிப் எதிர்வாதம் செய்ய அழைக்கப்படுவாரா என்ற தீர்ப்பை இன்று நீதிபதி முகமர் நஸ்லான் முகமட் கசாலி வழங்கவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அதற்காக, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு நடைபெறும் நீதிமன்றத்திற்கு வந்த நஜிப் அந்தத் தீர்ப்புக்காகத் தற்போது நீதிமன்றத்தில் காத்திருக்கிறார்.

நஜிப் வழக்கின் பார்வையாளர்களாக அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி, மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரும் வந்திருக்கின்றனர்.