கோலாலம்பூர்: மத்திய அரசியலமைப்பிற்கு எதிராக தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளின் இருப்பை சவால் செய்த வழக்கறிஞர் முகமட் கைருல் அசாம் அசிஸ்ஸின் விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மலாயா தலைமை நீதிபதி அசாஹர் முகமட் (படம்) கூறுகையில், கல்விச் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக தீர்ப்பளித்தார்.
தாய்மொழிப் பள்ளிகளின் இருப்பை சவால் செய்வதற்கு, கூட்டரசு நீதிமன்றம் ஒரு தளமாக இருக்காது என்றும் அவர் தீர்ப்பளித்தார்.
அதற்கு பதிலாக, உயர்நீதிமன்றம் இது தொடர்பான அரசியலமைப்பு சிக்கல்களை விசாரிக்க முடியும் என்று கூறினார்.