Home One Line P2 டி.என்.சேஷன் – முன்னாள் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் – காலமானார்

டி.என்.சேஷன் – முன்னாள் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் – காலமானார்

895
0
SHARE
Ad

சென்னை – இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டி.என்.சேஷன் (படம்) தனது 86-வது வயதில் மாரடைப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10)  இரவு சென்னையில் காலமானார்.

திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்ற முழுப் பெயர் கொண்ட அவரை அறியாத இந்திய அரசியல் பார்வையாளர்கள் இருக்க முடியாது. இன்றைக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பல வகைகளிலும் சிறப்பாகவும், நேர்மையாகவும், ஒழுங்குடனும், பாரபட்சம் இன்றியும் செயல்படுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவரும், அதற்கான சட்ட நடைமுறைகளை ஏற்படுத்தியவரும் சேஷன்தான்.

அவரது காலகட்டத்தில் இந்திய அரசியல்வாதிகளுக்கும், இந்திய அரசியல் கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சேஷன்.

#TamilSchoolmychoice

அவர் ஒரு சிறந்த அரசுப் பணியாளர் என்றும் அவரது நேர்மையான நடவடிக்கைகளால் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூலம் நமது ஜனநாயகம் மேலும் வலிமை பெற்றது என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்தார்.

1990-ஆம் ஆண்டு டிசம்பர் 12 முதல் 1996 டிசம்பர் 11 வரை அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றினார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் பலரும் சேஷன் மறைவுக்கு தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.