Home One Line P1 தஞ்சோங் பியாய்: பெர்சாத்து தனியாக போராடவில்லை!- சுரைடா

தஞ்சோங் பியாய்: பெர்சாத்து தனியாக போராடவில்லை!- சுரைடா

579
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலை பெர்சாத்து கட்சி தனியாக நின்று போராடுகிறது என்ற கூற்றினை, நம்பிக்கைக் கூட்டணியின் மகளிர் பகுதி தலைவர் சுரைடா கமாருடின் மறுத்துள்ளார்.

முன்னாள் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் வேட்புமனு தாக்கலின் போது பிகேஆர் கட்சியிலிருந்து எவரும் கலந்துக்கொள்ளாததை அவர் குறிப்பிட்டதற்கு சுரைடா கருத்துரைத்தார்.

அந்த அறிக்கை தவறானது என்றும், அறிக்கை வெளியிடப்பட்டபோது தாம் தஞ்சோங் பியாயில் இருந்ததாகவும் சுரைடா கூறினார்.

#TamilSchoolmychoice

நான் நினைக்கிறேன் முகமட் காலிட் தஞ்சோங் பியாவின் முழுப் பகுதியையும் காண முடியாததால், அவர் எங்களை சந்திக்க முடியவில்லை, ஆனால் அனைத்து கட்சி அங்கத்தினர்களும் வெற்றியை உறுதி செய்வதற்காக தங்கள் பணியைச் செய்து வருகிறார்கள். பெர்சாத்து தனியாக இல்லைஎன்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் சந்தித்தபோது கூறினார்.