கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப்பின் வழக்கில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் தலையீடல் இருப்பதாக அம்னோ உச்சக்குழு உறுப்பினரான லோக்மான் நூர் அடாம் தெரிவித்தார்.
“மகாதீரின் மரணம் மிகுந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கப்படும். மகாதீர் மரணமடையும் வரையிலும் அவரின் கொடுங்கோன்மை முடிவுக்கு வராது. நான் முடிவைக் கேட்க வரவில்லை. எங்களுக்கு நீண்ட நாட்களுக்குமுன்பே முடிவு தெரிந்துவிட்டது.
“பணத்த்தை நஜிப்பின் கணக்குகளில் செலுத்திய உண்மையான குற்றவாளிகளான நிக் பைசால் அரிப் காமில் சாட்சிகளாக அழைக்கப்படவில்லை. இன்றுவரை ஜோ லோ மற்றும் நிக் பைசால், செடி அக்தார் அசிஸ் உள்ளிட்டோரை அழைக்கவில்லை.”
“மகாதீர் தலையிட்டதை நான் ஆரம்பத்திலிருந்தே அறிந்தேன். தலையீடு இல்லாதிருந்தால் வழக்கு கைவிடப்பட்டிருக்கும்” என்று அவர் கூறினார்.
முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் 100-க்கும் மேற்பட்ட நஜிப்பின் ஆதரவாளர்கள் ஒன்று கூடினர்.