Home One Line P2 விஜய் சேதுபதியின் படங்களை பார்க்கக் கூடாது என சிறு குறு வியாபாரிகள் மக்களிடம் கோரிக்கை!

விஜய் சேதுபதியின் படங்களை பார்க்கக் கூடாது என சிறு குறு வியாபாரிகள் மக்களிடம் கோரிக்கை!

663
0
SHARE
Ad

சென்னை: சமீபத்தில் தனியார் நிறுவன இணைய வணிகம் தொடர்பான விளம்பரப் படத்தில் நடித்ததிலிருந்து நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்புகள் மேலோங்கி வருகின்றன. இந்த விளம்பரம் சிறுகுறு வியாபாரிகடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இணைய வணிகத்தின் மூலமாக சிறு குறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், வணிகர்கள் பெருமளவில் நட்டம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு எதிராக தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பாக கடந்த வாரம் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இதற்கு, விஜய் சேதுபதி தரப்பிலிருந்து எந்தவித செய்தியும் வெளியிடப்படவில்லை. ஆதலால், தற்போது மீண்டும் தங்களது அடத்த போராட்டம் பற்றி ஆலோசித்து வருவதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கும் படங்களை மக்கள் பார்க்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்ய உள்ளதாக அது தெரிவித்துள்ளது.