Home One Line P2 ஹாங்காங்: எதிர்ப்பாளர் ஒருவர் காவல் துறையினரால் சுடப்பட்டார்!

ஹாங்காங்: எதிர்ப்பாளர் ஒருவர் காவல் துறையினரால் சுடப்பட்டார்!

682
0
SHARE
Ad

ஹாங்காங்: அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆறாவது மாதத்திற்குள் நுழைந்து, வன்முறை அதிகரித்துள்ள நிலையில், இன்று திங்களன்று ஹாங்காங் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹாங்காங் தீவின் கிழக்குப் பகுதியில் எதிர்ப்பாளர்கள் மீது காவல் துறையினர் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கேபிள் டிவி மற்றும் பிற ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது ஓர் எதிர்ப்பாளர் காயமடைந்ததாக கேபிள் டிவி தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட காணொளி காட்சிகள் ஓர் எதிர்ப்பாளர் கண்களை அகலமாக திறந்து இரத்தக் குளத்தில் கிடப்பதைக் காண முடிந்தது.

#TamilSchoolmychoice

சாய் வான் ஹோவில் நடந்த சம்பவத்தின் போது காயமடைந்ததாக சந்தேகிக்கப்படும் 21 வயது நபர் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை ஆணையம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

அடையாளம் தெரியாத அந்த எதிர்ப்பாளர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கேபிள் டிவி தெரிவித்துள்ளது.