Home One Line P2 கலவரக்காரர்களால் மீண்டும் முடங்கியது ஹாங்காங்!

கலவரக்காரர்களால் மீண்டும் முடங்கியது ஹாங்காங்!

698
0
SHARE
Ad

ஹாங்காங்: இன்று செவ்வாய்க்கிழமை காலை ஹாங்காங்கில் கலவரக்காரர்கள் தொடர்ந்து போக்குவரத்தை சீர்குலைத்து, சாலைகளைத் தடுத்து, பல்வேறு மாவட்டங்களில் இரயில் தடங்களைத் தடைசெய்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிழக்கு இரயில் பாதை மற்றும் மேற்கு இரயில் பாதையில் இரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாகிவிட்டன என்று  மாஸ் டிரான்ஸிட் இரயில்வே கார்ப்பரேஷன் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

சில போராட்டக்காரர்கள் இரயில் தடங்களில் பொருட்களை எறிந்த பின்னர், நூற்றுக்கணக்கான பயணிகள் இரயில்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.  இரயில் பாதை வழியாக அருகிலுள்ள பல்கலைக்கழக நிலையம் மற்றும் கிழக்கு இரயில் பாதையில் உள்ள ஷா டின் நிலையத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

சில கலகக்காரர்கள் தடுப்புகளை அமைத்து, கார்ன்வால் தெரு மற்றும் டாட் சீ அவென்யூ சந்திப்பை செங்கற்கள், மர பலகை மற்றும் இரும்பு தண்டவாளங்களை வைத்துத் தடுத்தனர்.

நேற்று திங்களன்று, கலவரக்காரர்கள் போக்குவரத்தை முடக்கி, பல்வேறு இடங்களில் தீ வைத்ததன் மூலமும், அவர்களுடன் உடன்படாத குடியிருப்பாளர்களைத் தாக்கியதன் மூலமும் ஹாங்காங் முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தினர்.

ஹாங்காங்கை அழிக்கும் வன்முறையை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் அழுத்தம் கொடுக்காது என்று ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி கேரி லாம் நேற்று மாலை தெரிவித்தார்