Home One Line P1 1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க அருள் கந்தா கோரிக்கை!

1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க அருள் கந்தா கோரிக்கை!

754
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற திங்களன்று திட்டமிடப்பட்ட 1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததற்கான விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் நடவடிக்கைக்கு 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

அருள் கந்தாவின் வழக்கறிஞர் எம்.சிவானந்தன் கூறுகையில், தனது கட்சிக்காரர் உடனடியாக தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க விரும்புவதால் வழக்கு தொடரப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லானிடம் கூறினார்.

இந்த விவகாரத்தை விசாரிப்பதை ஒத்திவைக்கக் கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை விசாரிப்பதற்கு இன்று வெள்ளிக்கிழமை நிர்ணயிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமரின் வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜித் சிங்கின் கூறுகையில், டிசம்பர் 3-ஆம் தேதி எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் குற்றச்சாட்டுக்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ளவதற்காக, இந்த வழக்கை தாமதப்படுத்துமாறு தனது கட்சிக்காரர் கோரிக்க விடுத்துள்ளதாகக் கூறினார்.

1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததற்கான வழக்கினை அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஒத்திவைக்குமாறு நஜிப் கேட்டுக் கொண்டதாக ஹர்விந்தர்ஜித் தெரிவித்தார்.