Home One Line P2 ‘ஹீரோ’ படம் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை, இரசிகர்கள் ஏமாற்றம்!

‘ஹீரோ’ படம் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை, இரசிகர்கள் ஏமாற்றம்!

836
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹீரோ’. தற்போது இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வெற்றித் திரைப்படமான இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த செய்தியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தை டிசம்பர் 20-ஆம் தேதி வெளியிட 24 பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் 24பிலிம்ஸ் நிறுவனம் டி.எஸ். ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடம் கடந்த 2018-ஆம் ஆண்டு 10 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும், ஒப்பந்தபடி அக்கடன் தொகையை வட்டியுடன் திருப்பி வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை விசாரித்த நீதிபதிஹீரோபடத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கை டிசம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.