கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட விசாரணையில் சாட்சியமளிக்கும் சாட்சிகளில் ஒருவராக முன்னாள் 1எம்டிபி தலைவர் அருள் கந்தா பட்டியலிடப்பட்டுள்ளார்.
அரசு துணை வழக்கறிஞர் கோபால் ஸ்ரீ ராம் இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில் இதனை வெளியிட்டார்.
விசாரணையின் போது, நஜிப் மற்றும் அருள் கந்தா இருவரும் விசாரிக்கப்படுவர். 2016-ஆம் ஆண்டில் 1எம்டிபி குறித்த இறுதி கணக்கறிக்கையை திருத்தியதாக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரத்தில் அவருக்கு ஆதரித்ததாக அருள் கந்தா மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2016-ஆம ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று நஜிப் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த குற்றம் நடத்தப்பட்டதை நீதிமன்றத்திடம் நிரூபிக்க இருப்பதாக ஶ்ரீராம் கூறினார்.
“கூட்டத்தில் கூறப்படுவதற்கு முன்னரும் பின்னரும் அருள் கந்தா இந்த பரிவர்த்தனையில் குற்றம் சாட்டப்பட்டவருடன் உடன்பட்டுள்ளார். இது குறித்து அருள் கந்தா அரசு தரப்பில் சாட்சிக் கூற வேண்டும். இது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 63-இன் கீழ் அரசு வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிப்பார் என்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும் பொறுப்புக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.”
“இந்த பிரிவு குறித்து தகுந்த நேரத்தில் நீதிமன்றத்தில் தெரிவிப்போம்” என்றும் ஶ்ரீராம் கூறினார்.
“எங்கள் வழக்கை அம்பலப்படுத்த அவர்களின் சான்றுகள் அவசியம். சாட்சிகளின் ஆதாரங்களை மதிப்பீடு செய்ய ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டுவோம்,” என்று அவர் கூறினார்.
நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான் முன்னிலையில் இவ்விசாரணை நடத்தப்படுகிறது.
1எம்டிபி ஊழல் குறித்து விசாரிக்கும் தேசிய பொது கணக்காய்வாளர் குழுவிற்கு சமர்ப்பிக்கத் தயாராக இருந்த அறிக்கையை நஜிப் திருத்த உத்தரவிட்டார்.
எம்ஏசிசி சட்டப் பிரிவு கீழ் நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10,000 ரிங்கிட் வரையில் அபராதமும் விதிக்கப்படலாம். நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நஜிப்பைப் போலவே அருள் கந்தாவுக்கும் அதே தண்டனை விதிக்கப்படும்.