கோலாலம்பூர்: காணாமல் போன ஆர்வலர் அம்ரி சே மாட்டின் மனைவி, அரசாங்கம், உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின், முன்னாள் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி மற்றும் இரண்டு முன்னாள் காவல் துறைத் தலைவர்கள் காலிட் அபு பக்கார் மற்றும் புசி ஹாருன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நோர்ஹயாதி முகமட் அரிபின் இந்த வழக்கை இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் 21 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரின் நடவடிக்கையின் விளைவாக அவர் சந்தித்த சேதங்களுக்கு பல்வேறு நிவாரணங்களை நோர்ஹயாதி எதிர்பார்க்கிறார் என்று நோர்ஹயதியின் வழக்கறிஞர் லாரிசா அன் லூயிஸ் கூறினார்.
“இந்த வழக்கின் விசாரணையில் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் தவறான நடத்தையால் நோர்ஹயாதி மற்றும் அவரது குழந்தைகளின் துன்பங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று லூயிஸ் கூறினார்.