Home One Line P2 ஜடா: அடிமட்ட காற்பந்து வீரராக களம் இறங்கும் கதிர்!

ஜடா: அடிமட்ட காற்பந்து வீரராக களம் இறங்கும் கதிர்!

212
0
SHARE

சென்னை: நடிகர் கதிர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படமான ஜடா திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்டது. காற்பந்து விளையாட்டை மையமாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படத்தில், கதிர் காற்பந்து வீரராக நடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்திரைப்படத்தில், கதிர், சேது என்ற கதாபாத்திரத்தில் காற்பந்து வீரராக நடிக்கிறார்.

இத்திரைப்படத்தை இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிஷோர், ரோஷினி, யோகி பாபு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு நிமிட முன்னோட்டக் காட்சியில் அடிமட்ட காற்பந்து மற்றும் விளையாட்டின் பின்னணியில் உள்ள அரசியலை மையமாக வைத்து கதை நகர்த்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க வைக்கிறது.

இத்திரைப்படம் டிசம்பர் 6-ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:

Comments