Home One Line P2 “மக்கள் நலன் கருதி கமலுடன் இணையலாம்!”- ரஜினிகாந்த்

“மக்கள் நலன் கருதி கமலுடன் இணையலாம்!”- ரஜினிகாந்த்

820
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் நடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரும்பாலான நடிகர் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனிடையே, அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடி கூட, தாம் தமிழக முதல்வராவர் என்று கனவு கண்டிருக்க மாட்டார் எனும் சர்ச்சைக்குரிய கருத்தினை பதிவுச் செய்திருந்தார்.

மேலும், இம்மாதிரியான அதிசய நிகழ்வுகள் நேற்று நடந்தது என்றும், இன்றும் நடக்கும், நாளையும் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இக்கருத்திற்கு அதிமுக தரப்பிலிருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஒரு வேளை கமலுடன் இணைந்து அரசியலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டால், மக்களுடைய நலனுக்காக நிச்சயமாக இணைவோம் என்று அதிரடியாக கூறியுள்ளார்