Home One Line P2 ஹாங்காங்: கயிறுகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேறும் காட்சியால் பரபரப்பு!

ஹாங்காங்: கயிறுகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேறும் காட்சியால் பரபரப்பு!

630
0
SHARE
Ad

ஹாங்காங்: ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்தில் சிக்கித் தவிக்கும் எதிர்ப்பாளர்கள் தற்போது வளாகத்தை விட்டு வெளியேறும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியுள்ளன. எதிர்ப்பாளர்கள் வளாகக் கட்டிடங்களிலிருந்து இறங்க கயிறுகளைப் பயன்படுத்துவது அதில் பதிவாகி உள்ளது. மேலும், அவர்களை வளாகத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிள்கள் காத்திருப்பதும் அந்த காணொளியில் பதிவாகி உள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக, வளாகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களை கைது செய்வதாக காவல்துறை உறுதியளித்திருந்தது. ஆயினும், 18 வயதிற்குட்பட்ட பதின்ம வயதினர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, எதிர்ப்பாளர்கள் பல்கலைக்கழகத்தின் முக்கிய நுழைவாயிலை தடுத்ததாக கூறப்படுகிறது. இது வன்முறையைத் தூண்டியதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் வளாகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் சூழலை ஏற்படுத்தியது.