டிரானா: இன்று செவ்வாயன்று அல்பேனியாவில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 325 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலை 20 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டிரானாவிலிருந்து 13 மைல் தொலைவில் துறைமுக நகரமான டர்ரெஸில் மையப்பகுதி உள்ளது. அப்பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்து விழுவதைக் சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகள் காட்டுகின்றன.
இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக அல்பேனிய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் குறைந்தது 325 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை டூரஸ், லெஷே மற்றும் டிரானா ஆகிய மூன்று நகரங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.