கோலாலம்பூர்: முன்னதாக பிகேஆர் கட்சிக்கு எழுதிய கடிதத்தில் எம்ஏசிசி அறிக்கை பிரிவுத் தலைவர் செய்தது தவறு என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று திங்கட்கிழமை ஒப்புக் கொண்டது.
தவறான நடத்தை பற்றிய அறிக்கைகள் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அசாம் பாக்கி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிதார்.
“ஒழுங்கு வழிகாட்டுதல்களின்படி (இது எம்ஏஏசி பின்பற்ற வேண்டியது) இந்த நடவடிக்கை எந்த அரசியல் கட்சிக்கும் பொருந்தாது.”
“எந்தவொரு அரசியல் கட்சியிலும் அதன் உறுப்பினர்களின் தவறான நடத்தை தொடர்பாக இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது எம்ஏசிசியின் கொள்கை அல்ல.”
“எனவே, இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இந்த அறிவிப்பு கடிதத்தை பிகேஆர் ஒழுக்காற்றுக் குழு தலைவருக்கு எம்ஏசிசி அனுப்பும். எதிர்காலத்தில் தவறான புரிதல்களைத் தவிர்ப்பதற்காக இது மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு கட்சித் தேர்தலின் போது ஊழல் மற்றும் கையூட்டு வழக்குகளில் ஈடுபட்டதாக நம்பப்பட்டதை அடுத்து பிகேஆர் தனது இரண்டு உறுப்பினர்களை பகாங்கில் இருந்து நீக்கியது.
முறைகேடு குறித்து பிகேஆர் ஒழுக்காற்று குழுவுக்கு, கடந்த அக்டோபர் 23 தேதியிட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கடிதம் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனிடையே, எம்ஏசிசியின் இந்த கூற்றுக்குப் பிறகு பிகேஅர் கட்சி இரண்டு உறுப்பினர்களின் பதவி நீக்கம் குறித்த கடிதத்தை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று பெரா பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது.