Home One Line P2 பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வாக்கெடுப்புக்கு முன்பதாக அஜித் பவார் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகல்!

பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வாக்கெடுப்புக்கு முன்பதாக அஜித் பவார் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகல்!

737
0
SHARE
Ad

புது டில்லி: நாளை புதன்கிழமை (நவம்பர் 27) பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வாக்கெடுப்புக்கு முன்னதாக, என்சிபி தலைவர் அஜித் பவார் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இது குறித்து அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், என்டிடிவி மற்றும் நியூஸ் 18 ஆகியவை பவார் தனது பதவி விலகல் கடிதத்தை பாட்னாவிஸிடம் சமர்ப்பித்ததாகத் தெரிவித்துள்ளன.

இது உண்மையாக இருந்தால், இது பவாரின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும்  என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், பவாரின் மகன் தனது தந்தை பதவி விலகியதாகக் கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த சனிக்கிழமை காலை, தேவேந்திர பாட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். அஜீத் பவார் துணை முதல்வராகப் பதவியேற்றார்.

இதற்கிடையில், முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.