கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலை விரைவில் அறிவிப்பது, போன்ற தேர்தல் முறை மேம்பாடுகள் தொடர்பான 15 விவகாரங்களில் ஒன்றாக சேர்க்கப்படும் என்று தேர்தல் மேம்பாடு அமைப்பு மற்றும் சட்ட சிறப்புக் குழு (இஆர்சி) தெரிவித்துள்ளது.
இந்த 15 விவகாரங்களும் அடுத்த மாதத்திற்குள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு வழங்கப்படும் என்று இஆர்சி தலைவர் அப்துல் ராசிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
“நான் இவ்விவகாரங்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். எனவே, அடுத்த மாதம் பிரதமருக்கு அனுப்ப முடியும் என்று அவர் உத்தரவு வழங்கினால், உண்மையான அறிக்கையை வெளியிடுவோம் என்று நம்புகிறேன்.”
“அவற்றில், பொதுத் தேர்தல் தேதியை முன் கூட்டியே அறிவிப்பது அடங்கும். ஆம், ஒரு தேதியை (தேர்தல்களுக்கு) அமைப்பது பற்றி பேசுவோம். நாம் பணத்தை வீணாக்காதபடி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நிர்வாக அமைப்புகளுக்கும் நியாயமாக இருக்க வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தை பகிரங்கப்படுத்தினால், வளர்ந்த நாடுகள் வரிசையில் தேர்தல் ஆணையம் ஒரு சிறந்த தேர்தல் கட்டுப்பாட்டு நிறுவனமாக இருக்கும் என்று அப்துல் ராசிட் கூறினார்.