Home அரசியல் ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டுகால திட்டத்தை ஏற்று வரலாற்றுத் தவறுகளை திருத்தலாம்

ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டுகால திட்டத்தை ஏற்று வரலாற்றுத் தவறுகளை திருத்தலாம்

479
0
SHARE
Ad

tunkuazizபுக்கிட் மெர்த்தாஜம், ஏப்.9- ஹிண்ட்ராப் வரைந்துள்ள ஐந்தாண்டு கால திட்டத்தை ஏற்று இந்தியர்களின் மீது இருக்கும் வரலாற்றுத் தவறுகளை திருத்தலாம் என்று ஜசெகவின் முன்னாள் உதவித்தலைவர் துங்கு அஜிஸ் இப்ராகிம் தெரிவித்தார்.

காலணித்துவ ஆட்சியில் இந்தியர்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். அவர்கள் அதிலிருந்து மீண்டு உயர்ந்த சமுதாயமாக திகழ,அரசாங்கம் இந்தியர்களின் மேம்பாட்டிற்கு பொருளாதாரத் திட்டத்தை இப்போதே வகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஒரே மலேசியா திட்டம்,  பொருளாதார உருமாற்றுத் திட்டம் என்று மக்கள் நலன்களுக்காக பல திட்டங்களை வகுத்த பிரதமர் நஜிப், ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டு கால திட்டத்தையும் ஏற்று, இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்தார்.