Home One Line P1 பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை!

பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவில்லை!

776
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த வார இறுதியில் பிகேஆர் இளைஞர் காங்கிரஸ் (ஏஎம்கே) கூட்டத்தில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று 2019-ஆம் ஆண்டுக்கான ஏஎம்கே காங்கிரஸ் குழுத் தலைவர் சுவா வீ கியாட் உறுதிப்படுத்தினார்.

அன்வார் மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முன்மொழிந்த லெம்பா பந்தாய் ஏஎம்கே உதவித் தலைவர் நஸ்ரின் இட்ஹாம் ரசாலி அளித்த அறிக்கை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒரு ஆய்வுக்குப் பிறகு, சகோதரர் நஸ்ரின் அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் எந்த கிளை அளவிலும் எழுப்பவில்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று அவர் கூறினார்.

அண்மையில் பல உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ததற்கான கட்சியின் முடிவை துணைத் தலைவர் அஸ்மின் அலி நிராகரித்ததை அடுத்து அன்வாருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்படுத்த நஸ்ரின் நேற்று ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டார்.

இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்ட சுவா, ஏஎம்கே ஆண்டு தேசிய காங்கிரசில் விவாதிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு திட்டமும் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடைபெற்ற கிளை ஆண்டு பொதுக் கூட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்றார்.

ஏஎம்கே கிளையிலிருந்து பல திட்டங்களை நாங்கள் பெற்றோம். அவை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிமின் தலைமைக்கு ஆதரவளித்திருந்தன.”

எனவே, சகோதரர் நஸ்ரின் எழுப்பிய பிரச்சினை பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு வித்தை தவிர வேறொன்றுமில்லை என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சிலும் அன்வார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் எதுவும் எந்தவொரு தரப்பினரும் சமர்ப்பிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.