Home One Line P1 “வேலை செய்யக்கூடிய உறுப்பினர்கள் இல்லாததால் நாம் தஞ்சோங் பியாய், செமினி தேர்தல்களில் தோற்றோம்!”- மகாதீர்

“வேலை செய்யக்கூடிய உறுப்பினர்கள் இல்லாததால் நாம் தஞ்சோங் பியாய், செமினி தேர்தல்களில் தோற்றோம்!”- மகாதீர்

799
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சியில் மேலும் நிறைய புதிய உறுப்பினர்களை ஈர்ப்பதற்கு கட்சி இன்னும் உழைக்க வேண்டி உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

எனவே, இந்த இலக்கினை அடைய பெர்சாத்துவின் இளைஞர் பகுதியான அர்மாடா, இதில் முக்கியப் பங்கினை ஆற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், நாம் மோசமாக தோற்றோம். நம்மிடம் உறுப்பினர்கள் இல்லாததால் இந்த தோல்வி சாத்தியமானது.”

#TamilSchoolmychoice

அதேபோல் செமினியிலும், நமக்கு உறுப்பினர்கள் இல்லாததால் நாம் அத்தொகுதியை இழந்தோம். இது நம் பிரச்சனை, ” என்று அவர் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

சுயநலத்தை ஒழிக்கவும், கட்சியின் போராட்டம் வெற்றிக்கு அடிப்படை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் பெர்சாத்து கட்சியின் இயந்திரங்களை நினைவுப்படுத்தினார்.

நம் சொந்த இலக்குகளை அடைய கட்சி நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று நாம் நினைத்தால், நாம் வெற்றி அடையப்படுவதிலிருந்து பின்னுக்குத் தள்ளப்படுவதோடு,  கட்சி தோல்வியடையும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.