அவரை விமான நிலையத்தில் டத்தோஸ்ரீ எம்.சரவணனும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும் மற்ற பிரமுகர்களுடன் வரவேற்றனர்.
தமிழ் மொழிக்காக முக்கியப் பங்காற்றியுள்ள 24 ஆளுமைகள் குறித்து ‘தமிழாற்றுப் படை’ என்ற பெயரில் தனது அழகுத் தமிழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்கும் நூல் தமிழர் சமுதாயத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வாழ்த்துரை வழங்குகிறார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றுகிறார்.
வெற்றித் தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.