Home கலை உலகம் “கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம் “டாக்டர்”

“கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படம் “டாக்டர்”

847
0
SHARE
Ad
“கனா” படத்தில் நெல்சன் திலீப்குமார் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்

சென்னை – நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ படம் இரசிகர்களை வயிறுவலிக்கச் சிரிக்கச் செய்ததோடு, பெரும் வெற்றி பெற்ற படமாகவும் திகழ்ந்தது.

அதன் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ரியலிட்டி நகைச்சுவைத் தொடர்களையும் இயக்கி அனுபவம் பெற்றவர். அந்தக் காலகட்டத்திலேயே அவரும் சிவகார்த்திகேயனும் மிகவும் நெருக்கமானவர்களாகப் பழகி வந்தனர்.

நெல்சன் மீது கொண்ட மரியாதை காரணமாகத்தான் தனது “கனா” படத்தில் பெண்கள் கிரிக்கெட் பயிற்சியாளராக சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரத்திற்கு நெல்சன் திலீப்குமார் என்ற பெயரையே வைத்தார் சிவகார்த்திகேயன்.

#TamilSchoolmychoice

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை நெல்சன்தான் இயக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“டாக்டர்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படம் டாக்டர்கள் குறித்த கதையைப் பின்னணியாகக் கொண்டது என நெல்சன் கோடி காட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருப்பது “ஹீரோ” என்ற படமாகும். அதன்பிறகு “டாக்டர்” உருவாகத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.